செப்பு ஆசிரியன் கண்ணதாகலானும், வினாவினை யறிவிப்பது அதுவாகலானும், வினாவின்றியும் அது நிகழுமாகலானும், வழூஉப்பன்மை அதன் கண்ணது ஆகலானும் முற் கூறப்பட்டது. வினாவுரையுஞ் செப்பு நிகழ்தலிற் செப்பென ஒன்றேயா யடங்காதோ எனின் அங்ஙனம் அடங்குமாயினும் ஒன்றனை யறியாதுகூறல் வினாவென்றும், ஒன்றனையறிவித்தற்குக் கூறல் செப்பென்றும் இரண்டாகப் பகுத்து ஆராய்ந்தாரென வுணர்க. (13) வினா செப்பாகவும் வரும் எனல் |