சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

31

என்  - எனின்  இடம்பற்றி    நிகழுஞ்   சொற்களுட்  சிலவற்றிற்கு
இலக்கணங்கூறுவான்,  அச்சொற்களது  இடங்களது  பெயரும்  முறையுங்
கூறியமுகத்தான் அவற்றிக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   செலவுப்        பொருண்மைக்கண்ணும்,      வரவுப்
பொருண்மைக்கண்ணும்,  தரவுப்   பொருண்மைக்கண்ணும்,   கொடைப்
பொருண்மைக்கண்ணும்,   நிலைபெற்றுத்   தோன்றுகின்ற செலவு, வரவு,
தரவு,   கொடையென்ற   நான்கு   சொல்லும்,   தன்மை   முன்னிலை
படர்க்கையென்று         சொல்லுப்பட்ட        அம்மூன்றிடத்திற்கும்
பொதுவகையான் உரிய, (எ - று.)

(எ - டு.) சிறப்புவகையாற் கூறும்வழிக் காட்டுதும்.           (28)

தன்மை முன்னிலைக்குரிய சொற்கள்
 

29.

அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.
 

என்  -  எனின்  மேற்கூறிய   சொற்களுள்  சிலவற்றிக்குச்  சிறப்பு
வகையான் இட இலக்கணங் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறப்பட்ட  நான்கு  சொல்லுள்ளும்,  தரும்  வரும்
என்னுஞ்    சொல்லிரண்டும்    தன்மை    முன்னிலைக்கும்    ஆம்;
படர்க்கைக்கு ஆகாது, (எ - று.)

(எ -  டு.)   எனக்குத்  தருங்  காணம்.  நினக்கு  வருங்  காணம்
எனவரும்.

படர்க்கைக்குரிய சொற்கள்
 

30.

ஏனை யிரண்டும் ஏனை யிடத்த.
 

என் - எனின் இதற்கும் விதி யொக்கும் என்றவாறு.

(இ - ள்.) ஒழிந்த  செல்லும் கொடுக்கும் என்னுஞ் சொல் இரண்டும்,
ஒழிந்த  படர்க்கையிடத்திற்கு   உரிய;   தன்மைக்கும்  முன்னிலைக்கும்
ஆகா, (எ - று.)

(எ - டு.)  அவர்க்குச்  செல்லுங்  காணம்,  அவர்க்குக் கொடுக்குங்
காணம் எனவரும்.

பொதுச்சூத்திரத்துள்     தன்மைக்கும்    முன்னிலைக்கும்    உரிய
தரவினையும்  வரவினையும்  தரவு  வரவு  என்று  ஓதாது  வரவினைச்
செலவினோடு