சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

33

என் - எனின்  உலகத்துப்  பொருள்தான்  அறிந்த பொருளென்றும்,
அறியாப்பொருளென்றும்  இரண்டு  வகைத்து.   அவற்றுள்,   அறியாப்
பொருண்மேல் நிகழுஞ் சொல்லது இலக்கணங் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  யாது   எவன்   என்று   சொல்லப்படும்  அவ்விரண்டு
சொல்லும் தன்னான் அறியப்படாத  பொருளிடத்து  வினாச் சொல் லாய்
யாப்புறத்தோன்றும், (எ - று.)

(எ - டு.)  நுந்நாடு யாது? இப்பண்டி யுள்ளது எவன்? என வரும்.

இவற்றுள் எவன்  என்பது  இக்காலத்து  ‘என்’  என்றும்,  ‘என்னை’
என்றும் மருவிற்று.

செறிய என்றதனாற்  பிறவும்  அவ்வினாப்  பொருளிடத்து  வருவன
கொள்ளப்படும்.

(எ - டு.) யாவன்,  யாவள்,  யாவர்,  யார், யாவை, யா, எப்பொருள்
என இவை. எவன் என்பது  அஃறிணை  இருபாற்கும்  உரிய இதனானே
யெனினும்  ஒருமைப் பான்மேல்  வருவதே  பெரும்பான்மை  யென்பது
உரையிற் கோடல் என்பதனாற் கொள்ளப்படும்.  (31)

அவற்றுள் யாது என்னும் சொல்
 

32.

அவற்றுள்,
யாதென வரூஉம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாதலும் உரித்தே.
 

என் - எனின்,  மேல்   அறியாப்   பொருண்மேல்  நிகழும்  என்ற
மரபிலக்கணம்   கூறிய   சொற்களுள்   ஒன்றற்குச்   சிறிதறிந்தவழியும்
வருமரபும் உண்டென்று அறிந்து அது காத்தல் நுதலிற்று.

(இ - ள்.)  மேல்வினாவப்பட்ட   இரண்டனுள்ளும்,   யாது  என்று
சொல்ல  வருகின்ற  வினாப்பொருளை  உணரநின்ற   சொல்,  அறிந்த
பொருளிடத்துண்டாகிய   ஐயந்தீர்தற்கு    ஆராய்ந்த    சொல்லாதலும்
உரித்து, (எ - று.)

(எ - டு.) ஒருவன் ஐந்து  எருதுடையான்,  காப்பக் கொடுப்பவற்றுள்
ஒன்று  கெட்டதென்று  காப்பானிடைச்   சொல்லினவிடத்து   எருதுடை
யான்  வெள்ளை,  காரி  என்னும்  ஐயம்  தீர்தற்பொருட்டு  அவற்றுள்
யாதென்று வினாதல் என்பது.

மற்சூத்திரத்துப்  பின்தொடர்புடையது என்பதனைப்பின்வைக்கற்பாற்று
என்பதனான் இன்தோடு இயைபுடைய யாதென்பதனை எவனின்