சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

45

மெல்லாம்    அறத்திற்குக்  கறக்கும்  எனவும் இவை அஃறிணைக்கட்
பெயரினுந்   தொழிலினும்   பிரிந்த   பெண்ணொழி   மிகுசொல்லும்
ஆணொழி மிகு சொல்லுமாம்.

எல்லாம்     என்றதனான் மேற்சூத்திரத்து  ஒருபெயர்ப்  பொதுச்
சொலன்றித்   தலைமை   பற்றி   வருவனவும்   சிறுபான்மை  பற்றி
வருவனவும் கொள்க.

(எ - டு.) ஆதீண்டுகுற்றி,  வயிரக்கடகம்  என்னுந் தொடக்கத்தன.

இன்னும் அதனானே இனஞ் செப்பாது  ஒரு  தொழிற்கண்  மிகை
விளக்குதற் பொருட்டாக வருவனவும் அமைத்துக் கொள்க.

(எ - டு.)   இவர் பெரிதும் சொல்லுமாறு  வல்லர்,  இவர் பெரிதுங்
கால் கொண்டோடுவர், இவ்வெருது புல்தின்னும் எனவரும்.

இதனாற்    சொல்லியது இருதிணையிடத்தும் ஆண்பாற்கும் பெண்
பாற்கும் சொல்லுதற்கண்ணே உரிய பெயர்கள், அப்பொதுமை யொழிய
ஒரு    பாற்கண்ணே    யோடுதன்    மரபன்று;    மரபன்றாயினும்
அமையுமென்று  மரபுவழு அமைத்தவாறு. இலேசினாற் கொண்டனவும்
மரபுவழுவமைதி என உணர்க.                             (50)

திணை விரவிய பெயர்கள் முடியுமாறு
 
  

51.

பலவயினானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.
 

என் - எனின்    செய்யுளகத்துத்      திணைவழு   வமையுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பல  விடத்தானுந் திணை விரவி யெண்ணப்படும் பெயர்
அஃறிணை முடிபினவாம்; செய்யுளகத்து, (எ - று.)

(எ - டு.) ‘வடுக ரருவாளர் வான் கரு நாடர்
சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங்
குறுகா ரறிவுடை யார்.’

எனவரும்.

பலவயினானும்     எனறதனாற்  சிலவயினான்  திணை  விரவாது
உயர்திணை  யான்  எண்ணி  அஃறிணையான்  முடிவனவும்  கொள்க
என்பது.

(எ - டு.) “பாணன்  பறையன்  துடியன் கடம்பன் என்று, இந்நான்
கல்லது குடியுமில்லை” எனவரும்.

சிலவயினான் திணை விரவி, எண்ணி உயர்திணையான் முடிவனவுங்
கொள்ளாமோ  வெனின், சான்றோர் செய்யுட்கு அவ்வாறு  வருவனவா
யின்மையிற் கொள்ளாம் என்பது.