சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

54

(எ - டு.) காலம்  என்பது  மகரவீறு; காலன் என்னும் னகரவீறாய்
நின்றுழிக்  காலன்  கொண்டான் என முடியும். உலகத்தோர் பசித்தார்,
உயிர்க்கிழவன் போயினான் என்பனவும் அவை.

இதனாற்  சொல்லியது மேல் ‘நின்றாங்கிசைத்தல் இவணியல் பின்று
என்ற   விலக்கு,   இவண்   எனக்   காலமும்  உலகமும்  என்னும்
வாய்பாட்டினையே   நோக்கி  விலக்காது,  அப்பொருண்மேல்  வரும்
வாய்பாடுகளெல்லாம்  விலக்குவதுபோலும் நோக்கப்பட நின்றது என்று
கொள்ளினுங்  கொள்ளற்க, என்று அவை வேறிடத்தாயின்  இசைக்கும்
எனவுங் கூறவேண்டிக் கூறினார் என்பது.                     (60)

எடுத்த மொழி இனம் செப்பலும் உண்டு என்றல்
 

61.

எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே.
 

என் - எனின், இஃது அருத்தாபத்தி மேற்று.

(இ - ள்.)  விதந்தமொழி  தன்னினத்தைக் காட்டி நிற்றலும் உரித்து;
உம்மையால் காட்டாது நிற்றலும் உரித்து, (எ - று.)

(எ - டு.) கீழ்ச்சேரிக் கோழி  அலைத்தது   என்புழி  மேற்சேரிக்
கோழி அலைப்புண்டது   என்பது    சொல்லாமையே    முடிந்ததாம்.
குடங்கொண்டான்  வீழ்ந்தான் எனக் குடம்வீழ்தலும் முடிந்தது. இவை
இனஞ்  செப்பின.  ஆ  வாழ்க,  அந்தணர்  வாழ்க  என்பன இனஞ்
செப்பாதன.

இவையும்     இனம் செப்பின என்னாமோ எனின், சொல்லுவான்
கருத்து அஃதன்மையானும், மறுதலை பல உள்வழி இனஞ் செப்பாமை
யானும் இனஞ்செப்பாவாயின என உணர்க.                   (61)

பன்மை சுட்டிய பெயர்கள் முடியுமாறு
 

62.

கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே.
 

என் - எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று.

(இ - ள்.)  கண்ணும் தோளும் முலையும் பிறவும் ஆகிய பன்மைப்
பொருளை  உணர்த்திய  சினைநிலைமை  உணர நின்ற சொற்கள் தம்
பன்மையால்   கூறுதலையே   இலக்கணமுறையாக   உடைய  அல்ல;
அதிகாரத்தானும்   உயர்திணையாய்  முடிதலுடைய;  எப்பொழுதுமோ
எனின், அற்றன்று; தமது வினைக்கேற்ற எழுத்