114

பி. இ. நூ.

இல. வி. 28117

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தலை யுரைத்தலும்

இளம்

வ-று : ‘தண்பெரும்  பந்தர்த்   தருமணன்  ஞெமிரிய’  (நற்.143)
என்றக்கால், பரப்பிய என்பதாம்.

‘புண்ணுமிழ்   குருதிப்  புனல்  பாய்ந்து’   என்றக்கால்,    பரந்து
என்பதாம்.

சேனா

இ-ள் : ‘தருமணன்  ஞெமிரிய  திருநகர் முற்றத்து’ (நெடு நல். 90)
எனவும், ‘பாய் புனல்’ எனவும், ஞெமிர்தலும் பாய்தலும்   பரத்தலாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

தெய்

இ-ள் :  ஞெமிர்தல்  என்னுஞ்  சொல்லும்   பாய்தல்   என்னுஞ்
சொல்லும் பரத்தல் என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் :  ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடு  நல். 90)
‘பாய்புனல்’.

நச்

இதுவுமது.

இ-ள் : ஞெமிர்தலும்   பாய்தலும்  பரத்தற்  பொருளஞெமிர்தலும்
பாய்தலும் பரத்தலாகிய குறிப்புப் பொருண்மையுடைய, எ-று.

உ-ம் : ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’
‘புண்ணுமிழ் குருதி முகம் பாய்ந் திழிதர’   (குறிஞ்சிப். 172)

என வரும்.

வெள்

இ-ள் :  ஞெமிர்தல் பாய்தல் என்னும் உரிச்சொற்கள் பரத்தலாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’எனவும், ‘பாய்புனல்’
எனவும் வரும்.