115

ஆதி.

பொருள் : ஞெமிர்தல் - ஒடித்தல், நெரித்தல் - பரப்பிய
             பாய்தல்- துள்ளிப் பாய்தல் - பரப்பிய

கவர்வு
 

356.

1 கவர்வு விருப்பாகும்                          (65)

(கவர்வு விருப்பு ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Kavarvu’ is desire.

ஆல்.

‘Kavarvu’ means desire

இளம்.

வ-று : 2 ‘கொள்ளை   மாந்தரின்  ஆனாது   கவரும்’  (அகம்.3)
என்றக்கால் விரும்பும் என்பதாம்.

சேனா

இ-ள் : (சூ. 356,  357, 358 ஆம் சூத்திரங்களுக்குச் சேர்த்து உரை
எழுதப்பட்டுள்ளது. 358ல் காண்க)

தெய்

இ-ள் : கவர்பு என்னுஞ்  சொல்  விருப்பு என்பதன் பொருள்படும்,
எ-று.

உ-ம் :3 ‘கவர் நடைப் புரவி’ (அகம் 130)

நச்:

இதுவும் அது.

இ-ள் : கவர்வு விருப்பாகும்கவர்வு விருப்பாகிய  குறிப்புணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘கவர்  நடைப்  புரவி’  (அகம் 130)  என  வரும்.  இனி,
‘கொள்ளைமாந்தர்  இன்  இன்னாது கவரும்’ எனக்  கைக்கொள்ளுதல்
‘கூறிய கிளவி’ (உரி. 92) என்பதனாற் கொள்க.


1. கவர்புதெய், பாடம்.

பொருள் : 2. கள்வர்போல ஒழியாது விரும்பும்

         3. விருப்பந்தரும் நடையினையுடைய குதிரை.