ஆ. மொ. இல. The word ‘Viyal’ means width ஆல். ‘Viyal’ means broad. பி. இ. நூ. நேமிசொ. 58 வியல் அகல மாகும். இளம் வ-று : ‘வியலிரு வானம்’ என்றக்கால், அகலிருவானம் என்பதாம். சேனா. (356, 357, 358ன் உரை) இ-ள் : ‘கவர் நடைப் புரவி’ (அகம். 130) எனவும், ‘சேர்ந்து செறிகுறங்கு’ (நற். 170) எனவும், ‘வியலுலகம்’ எனவும், கவர்வு முதலாயின முறையானே விருப்பும் திரட்சியும் அகலமுமாயின குறிப்புணர்த்தும், எ-று. தெய் இ-ள் : வியல் என்னுஞ் சொல் அகலம் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : வியலுலகம். நச். இதுவுமது. இ-ள் : வியல் என் கிளவி அகலப் பொருட்டே வியல் என்னும் சொல் அகலமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. |