118

உ-ம் : ‘இருங்கல்  வியலறைக் கிடப்பி  வயிறு தின்று என வரும்.
இது, ‘வியன்தானை விறல் வேந்தே’ எனத் திரிந்தும் வரும்.

வெள்.

(356, 357, 358ன் உரை)

இ-ள் : கவர்வு  என்பது  விருப்பு என்னும்  குறிப்புணர்த்தும்; சேர்
என்பது  திரட்சி என்னும்  குறிப்புணர்த்தும்;  வியல்  என்பது  அகலம்
என்னும்  குறிப்புணர்த்தும்,  எ-று.

உ-ம் : ‘கவர்நடைப் புரவி’ எனவும், ‘சேர்ந்து செறிகுறங்கு’ எனவும்,
‘வியலுலகம்’ எனவும் கவர்வு, சேர், வியல்  என்பன முறையே  விருப்பு,
திரட்சி, அகலம் என்னும் குறிப்புணர்த்தின.

ஆதி.

பொருள் :வியல் ...................அகன்ற.

பேம், நாம், உரும்
 

1359.பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள                  (68)

(பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள)
 

ஆ. மொ. இல.

‘Pēm’.   nām’,  and  ‘urum’  these  three  words  give the sense
of fear.

ஆல்.

The  three  that  are  ‘Pēm’  ‘Nām’ and  ‘urum’ give  the  sense
of fear.

பி. இ. நூ.

இல. வி. 28118, 19.

பேநாம் உருமென வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சம் கூறலும்


1.பே-இளம், சேனா, பாடம்
பேஎ-தெய். பாடம்
பேம்-நச். பாடம்