119

இளம்.

வ-று :  1‘மன்ற மரா அத்த  பேமுதிர் கடவுள்’ (குறுந். 87) என்பது
அச்சம் முதிர் கடவுள் என்பதாம்.

2‘நாம்வருந் துறை சேர்ந்து’ என்பது  அச்சமுடைய  துறை  போந்து
என்பதாம்.

3‘உருமில் சுற்றம்’  (பெரும்பாண். 447)  என்பது  அச்சமில்  சுற்றம்
என்பதாம்.

இவையெல்லாம் குறிப்பு.

சேனா.

இ-ள் : ‘மன்ற மராஅத்த பேமுதிர்  கடவுள்’  (குறுந். 87)  எனவும்,
‘நாமநல்லார்’  எனவும்,  ‘உருமில் சுற்றம் (பெரும்பாண். 447)  எனவும்,
பே முதலாகிய மூன்றும் அச்சமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : பேஎ என்னுஞ் சொல்லும், நாம் என்னும் சொல்லும்  உரும்
என்னும்  சொல்லுமாகிய  அம்முறைமையையுடைய  மூன்று  சொல்லும்
அச்சப் பொருண்மையையுடைய, எ-று.

உ-ம்  : ‘மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந். 87),  “நாம
நல்லராக்   கதுவியாங்கு’,   ‘உருமில்   சுற்றமோ  டிருந்தோற்  குறுகி’
(பெரும்பாண். 447).

நச்

இதுவுமது.

இ-ள் : பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும்
அச்சப்  பொருள  பேம்  நாம்  உரும்  என்று   சொல்ல  வருகின்ற
கிளவியாகிய  அம்முறைமையினையுடைய  மூன்றும்  அச்சம்  என்னும்
உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மையையுடைய, எ-று.

உ-ம் : ‘மன்ற மரா அத்த பேஎமுதிர்கடவுள்’    (குறுந். 87).
‘நாம நல்லராக் கதிர்பட வமிழ்ந்த.

‘உருமில் சுற்ற மொடு’ (பெரும்பாண். 447) எனவரும்.   நாம் நாமம்
எனத்திரிந்து வழங்கிற்று.


பொருள் : 1.ஊர்ப்  பொதுமன்றத்துள்ள மராமரத்தின் கீழ் அச்சம்
              மிக்க கடவுள்.

         2.அச்சம்வரும் துறை சேர்ந்து

         3.அச்சமில் சுற்றம்

         4.அச்சம் தரும் நல்ல பாம்பு கதுவியது போல