வெள் இ-ள் : பே, நாம், உரும் என்னும் மூன்று சொற்களும் அச்சம் என்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘மன்ற மராஅத்த பேமுதிர்கடவுள்’ எனவும், ‘நாமநல்லரா’ எனவும், ‘உருமில் சுற்றம்’ எனவும் அச்சமாகிய குறிப்பு உணர்த்தின. நாம் நாம எனத்திரிந்து வழங்கிற்று. ஆதி பொருள் : பேம்-பேய்-அச்சம்தரு நாம்-நாம்-அச்சம்தரு உரும்-இடி-அச்சம்தரு குறிப்பு : அஞ்சி விழிப்பவனைப் பார்த்துப் பேபே என விழிக்கிறான், பேந்தப்பேந்தவிழிக்கிறான் என்பதும், அச்சப்படுத்துதலின் ‘பேஎய்’க்கு அப்பெயர் வந்தது என்பதும் இங்கு நினைவு கூறலாம். வய |