தெய். இ-ள் : வயவென்னுஞ் சொல் வலியென்பதன் பொருள்படும், எ-று. உ-ம் :‘வயக்களிறு’ (மதுரைக். 15) நச். இதுவுமது. இ-ள் : வயவலி ஆகும் வய வலியாகிய குறிப்பு உணர்த்தும் எ-று. உ-ம் : ‘துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்’ (புறம் 44) என வரும். வெள். இ-ள் : (சூ. 362ல் பார்க்க) ஆதி. பொருள் :வய-வசப்பட்ட-பலமான வாள் |