122

உ-ம் : ‘வாள்நுதல்’                             (முருகு. 6)

நச்.

இது பண்பு.

இ-ள் : வாள் ஒளியாகும் வாள் ஒளியாகிய பண்பு உணர்த்தும்,எ-று.

உ-ம் : ‘கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே’ (குறுந்.44) என
வரும்.

வெள்.

இ-ள் : (சூ. 362ல் பார்க்க)

ஆதி.

பொருள் : வாள்-வெட்டும் வாள்-ஒளிர்கிற

துயவு
 

362.

துயவென் கிளவி யறிவின் றிரிவே                 (71)

(துயவு என் கிளவி அறிவின் திரிவே)
 

ஆ. மொ. இல.

The word ‘thuya’ means confusion of knowledge or losing balance of mind.

ஆல்.

‘Tuyavu’ means confusion in the mind

இளம்.

வ-று  :  ‘அறிவு  துயவுறுத்தார்’  என்பது,  அறிவு  திரிவுறுத்தார்
என்பதாம்.

சேனா.

(சூ. 360, 361, 362ன் உரை)

இ-ள் :1 ‘துன்னருந்  துப்பின்  வயமான்’  (புறம்  44)  எனவும், ‘வாண்முகம்’   (புறம்.  9)  எனவும்,  ‘துயவுற்றேம்   யாமாக’  எனவும் வயமுதலாயின    வலியும்     அறிவு    வேறுபடுதலாகிய   குறிப்பும் ஒளியாகியபண்பும் உணர்த்தும்,  எ-று.


1. பொருள் :  கிட்டுதற்கரிய   வலியையும்  வலியகுதிரையையும்
      உடைய தோன்றலே.