தெய். இ-ள் : துயவு என்னும் சொல் அறிவின் திரிபாகிய பொருள்படும், எ-று. உ-ம் : ‘துயவுற்றேம் யாமாக’ நச். இது குறிப்பு. இ-ள் : துயவு என் கிளவி அறிவின் திரிபேதுயவு என்னும் சொல் அறிவினது திரிதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘துயவுற்றேம் யாமாக’ என வரும். வெள். (சூ. 360, 361, 362ன் உரை) இ-ள் : வய என்னும் சொல் வலியாகிய குறிப்புணர்த்தும்; வாள் என்னும் சொல் ஒளியாகிய பண்புணர்த்தும்; துயவென்னும் சொல் அறிவு வேறுபடுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘துன்னருந் துப்பின் வயமான்’ எனவும், ‘வாண் முகம்’ எனவும், ‘துயவுற்றேம் யாமாக’ எனவும் வரும். ஆதி பொருள் : துயவு---.....--- அறிவு மாறுபட்ட உயா |