சேனா. இ-ள் : (363, 364, 365 ஆம் சூத்திரங்களுக்குச் சேர்த்து உரை எழுதப்பட்டுள்ளது. 365 ஆம் சூத்திரம் பார்க்க) தெய் இ-ள் : உயா என்னுஞ் சொல் உயங்கல் என்பதன் பொருள் படும், எ-று. உ-ம் : ‘பருந்திருந் துயாவிளி பயிற்றும்’ (அகம். 19) நச் இதுவுமது. இ-ள் : உயாவே உயங்கல் - உயா வருத்தமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை’ (அகம்.19) எனவரும். வெள். இ-ள் : (சூ. 365-ல் பார்க்க) ஆதி பொருள் : உயா - கர்ப்ப காலமயக்கம் - விருப்ப மிகுதி. உசா |