125

நச்.

இதுவுமது.

இ-ள் : உசாவே சூழ்ச்சி - உசா சூழ்ச்சியாகிய குறிப்புணர்த்தும், 
எ-று.

உ-ம் : ‘உசாத்துணை’ (திருக்கோ. 400 உரை) எனவரும்.

வெள்.

இ-ள் : (சூ.365-ல் பார்க்க)

ஆதி.

பொருள் : உசா - 

வயா
 

365.

வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்         (74)

(வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம்)
 

ஆ. மொ. இல.

The word ‘Vaya’ means ardent desire

ஆல் 

‘Vaya’ means ardent desire

இளம்.

வ-று : ‘கூழ்கண்டு  வயாவினார்’  என்றவழி, வேட்கையாயினார்
என்பதாம்.

சேனா. 

(363, 364, 365-ன் உரை)

இ-ள் : ‘பருந்திருந்   துயாவிளி  பயிற்றும்  யாவுயர்   நனந்தலை’
(அகம்19) எனவும், ‘உசாத்துணை’ (குறுந்.207) எனவும், ‘வயவுறு மகளிர்’
(புறம்.20)  எனவும்,   உயா  முதலியன முறையானே     உயங்கலும்
சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய   குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : வயா என்னுஞ்சொல் வேட்கைப் பெருக்கத்தினையுணர்த்தும்,
எ-று.

உ-ம் : 1‘தொடீஇய   செல்வார்த்   துமித்தெதிர்   மண்டுங்
          கடுவய நாகுபோல் நோக்கி’    (முல்லைக்கலி, 16) 


பொருள் :1. தன்னைத் தீண்டச் செல்வார்களை இடையே விலக்கி
              எதிரேநெருங்கிச் செல்லும்  கடிய  வலியினையுடைய
              நாகுபோல் கோபித்து நோக்கி.