வயா என்றது கன்றின்மேற் காதல் குறித்து நின்றது. நச். இதுவுமது. இ-ள் : வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம் - வயா என்னுஞ் சொல் வேட்கையினது பெருக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்” (நாலடி. 21) எனவரும். ‘இது, வயவுறு மகளிர்’ (புறம். 20) எனத்திரிந்தும் நிற்கும். ஈண்டு வேட்கை என்றது கருப்பம் தங்கி வருத்தமுற்று நுகரப்படும் பொருள்மேல் செல்லும் வேட்கையை. வெள். (363, 364, 365-ன் உரை) இ-ள் : உயா என்னும் உரிச்சொல் உயங்கல் (வருந்துதல்) என்னும் குறிப்புணர்த்தும்; உசா என்னுஞ்சொல் சூழ்ச்சியாகிய குறிப்புணர்த்தும்; வயா என்னும் சொல் வேட்கைப் பெருக்கமாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘பருந்திருந் துயா விளிபயிற்றும் யாவுயர் நனந்தலை’ எனவும், உசாத்துணை’ எனவும், ‘வயவுறு மகளிர், எனவும் வரும். ஆதி. பொருள் : வயா...........? கறுப்பு, சிவப்பு |