128

உ-ம் : ‘நிற்கறுப்பதோர்   அருங்கடி   முனையள்’  எனவும்,  ‘நீ
சிவந்திறுத்த நீரழிபாக்கம்’ எனவும் வரும்.

ஆதி

பொருள் : கறுப்பு - நிறம் - சினத்தின் குறிப்பு 
          சிவப்பு - நிறம் - சினத்தின் குறிப்பு
 

367.

நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப          (76)

(நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப) 
 

ஆ. மொ. இல.

The scholars say that they mean colour also

ஆல்.

It is said that they mean Colour also.

இளம்.

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின், அதுவேயன்றிப் பண்புப்
பொருளும்படும் என்றவாறு.

‘உடம்பு கறுத்தது’ 
‘கண் சிவந்தன’

என்பன நிறத்தின்மேலும் செல்லும்.

சேனா

இ-ள் : ‘கறுத்த  காயா’,   ‘சிவந்த  காந்தள்’   (பதிற். 15) என
அவை வெகுளியேயன்றி நிற வேறுபாடுணர்த்தற்கும் உரிய,  எ-று.

1இவை  வெளிப்படும்   சொல்லாயினும்   ‘கறுப்பும்     சிவப்பும்
வெகுளிப்   பொருள’   என்றதனால்,  கருங்கண்,  செவ்வாய்  எனப்
பண்பாய வழியல்லது தொழிலாய வழி நிற வேறுபாடுணர்த்தாவென்பது
படுதலின் அதனைப் பாதுகாத்தவாறு.


1. கறுப்பு,  சிவப்பு  எனும்  சொற்கள்  கரும், செம்  எனப் பண்பு
நிலையில்   இருந்தால்   நிறத்தையுணர்த்தும்;  கறுத்த,  சிவந்த
என்பனவாகத்தொழில்நிலையில்    இருந்தால்      வெகுளியை
யுணர்த்தும்   எனக்     கொள்ள    நேருமோ   என   ஐயங்
கொண்டமையால்  கறுத்த கண்,  சிவந்த   வாய் எனத் தொழில்
நிலையில்     இருந்தாலும்      நிறத்தையுணர்த்தும்      என
அவ்வையத்தைப்  போக்க இச்சூத்திரம் கூறினார். நச். உரையும்
பார்க்க.