129

தெய்

இ-ள் : மேற்சொல்லப்பட்ட   கறுப்பும்    சிவப்பும்   வெகுளிப்
பொருட்கண் வருதலன்றி நிறத்தரு உணர்த்தற்கும் உரிய, எ-று.

உ-ம் : ‘கறுத்த காயா’, சிவந்த காந்தள்’ (பதிற். 15)

நச்.

இஃது   எய்தியதன் மேற் சிறப்பு விதி.

இ-ள் : நிறுத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப-கறுப்பு  சிவப்பு
எனத்   தொழிற்படுத்துக்   கூறிய  சொற்கள்  வெகுளியேயன்றி  நிற
வேறுபாடாகிய   பண்பு   உணர்த்துதற்கும்   உரிய  என்று  கூறுவர்
ஆசிரியர், எ-று.

இவை   தொழிற்பட்டுழியும்  பண்பு  உணர்த்தும் என வெளிப்படு
சொல்லையும் கூறினார்,   ஐயம் அகற்றுதற்கு.

உ-ம் : ‘கறுத்த காயா’
       ‘சிவந்த காந்தள்’   (பதிற். 15)

என வரும்.   முதல் சினைமுதல்.

வெள்.

இ-ள் : கறுப்பு   சிவப்பு   என்பன     வெகுளியே  யன்றி   நிற
வேறுபாடுணர்த்தற்கும்   உரிய, எ-று.

உ-ம் : ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள்’ என வரும்.

நொசிவு, நுழைவு,   நுணங்கு.
 

368.

நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை             (77)

(நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை)
 

ஆ. மொ. இல.

‘Nosivu’, ‘nulaivu’ and ‘nańgu’  mean  minuteness

ஆல்.

‘Nocivu’, ‘Nulaivu’ and Nuņanku’ mean minutness 

பி. இ. நூ.

இல. வி. 2832, 3

நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மைப்
பொருள வாகலும் பொருந்தும் என்ப.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவை  பண்பு பற்றி வந்தன.