131

ஆதி

பொருள் : நொசிவு - ஒடிகின்ற நிலை -
          நுழைவு  - நுழைந்துசெல்  -
          நுணங்கு -கூர்மை        -

=

 நுட்பமான சிறிய.

புனிறு
    

369.

புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே       (78)

(புனிறுஎன் கிளவி ஈன்ற அணிமைப் பொருட்டே)
 

ஆ.மொ.இல.

The word  ‘Puniru’  means the state of  having recently
      calved.

ஆல்.

The  morpheme  ‘Puniŗu’  gives  the  sense  of the  time 
       immediately  after  giving  birth  to. 

பி. இ. நூ.

நேமி. சொ. 59

புனிறு ஈன்றணிமை

இளம்.

வ-று : 1‘புனிற்றாப்   பாய்ந்தெனக்    கலங்கி’    (அகம்  56)
என்பது, ஈன்றணிய வாய்ப்பாய்தென என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘புனிற்றாப்   பாய்ந்தெனக்   கலங்கி’  (அகம் 56)  எனப்
புனிறுஎன்பது ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : புனிறு  என்பது  ஈன்றணித்து  என்னும்  பொருள்  பட்டு
நிற்கும், எ-று.

உ-ம் : ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம் 56)

நச்.

இது குறிப்பு.

இ-ள் : புனிறு  என்  கிளவி  ஈன்றணிமைப் பொருட்டே - புனிறு
என்னும் சொல் ஈன்றணிமையாகிய குறிப்புப்    பொருளுடைத்து, எ-று.


1. பொருள் : ஈன்ற அணிமையுடைய  பசு பாய்ந்ததாகக் கலங்கி.