132

உ-ம் :1‘புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போல’   (புறம் 68)
          ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி)         (அகம் 56)

என வரும்.

வெள்

இ-ள் : புனிறு    என்னும்    உரிச்சொல்     ஈன்றணிமையாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ என வரும். புனிற்றாஈன்று
அணிய கன்றினையுடைய பசு.

ஆதி

பொருள் : புனிறு....அண்மையின் ஈன்ற

நனவு
 

370.

நனவே களனு மகலமுஞ் செய்யும்               (79)

(நனவே களனும் அகலமும் செய்யும்) 
 

ஆ. மொ. இல.

‘Nanavu’  denotes  area  and  extensiveness.

ஆல்.

‘Nanavu’  means  arena  and  extensiveness.

பி. இ. நூ.  

இல. வி. 2828  

நனவே களனும் அகலமும் செய்தலும்

இளம்.

வ-று : ‘நனவுப்  புகு  விறலியிற்  றோன்று  நாடன்’  (அகம்  82)
என்றால், களம்புகு விறலியிற் றோன்று நாடன் என்பதாம்.

‘நனந்  தலை  யுலகு’  (குறுந்.  6)  என்றக்கால், அகன்றலை யுலகு
என்பதாம்.

சேனா.

இ-ள் : ‘நனவுப் புகு விறலியிற்  றோன்று  நாடன்’    (அகம் 82)
எனவும்,  ‘நனந்தலை  யுலகம்’  (பதிற்.  63)  எனவும், நனவு களனும்
அகலமுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.


1. பொருள் : ஈன்றணிமை நீங்கிய குழந்தைக்குச் சுரக்கும் முலை
               போல.