தெய். இ-ள் : நனவென்பது களன் என்பதன் பொருண்மையும் அகலம் என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம் : ‘நனவுப் புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம் 82) இது களம். ‘நனந்தலை யுலகம்’ (பதிற். 63) - இது அகலம். நச். இதுவுமது. இ-ள் : நனவே களனும் அகலமும் செய்யும் - நனவு களனும் அகலமுமாகிய குறிப்புப் பொருண்மையையுணர்த்தும், எ-று. உ-ம் : ‘நனவுப் புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம் 82) ‘நனந்தலை யுலகம் வளைஇ’ (முல்லை1) எனவரும். வெள். இ-ள் : நனவு என்னும் உரிச்சொல் களன் அகலம் ஆகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘நனவுப் புகு விறலியிற் றோன்று நாடன்’ எனவும், ‘நனந்தலை யுலகம்’ எனவும் களனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தியது. ஆதி. பொருள :நனவுவிழிப்புஆட்டமாடும் இடம், விரிவான மத |