135

372.

மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே           (81)

(மிகுதியும், வனப்பும் ஆகலும் உரித்தே).
 

ஆ. மொ. இல.

They  denote  excess  and  beauty  also.

ஆல்.

It  means  plenty  and  beauty  also.

பி. இ. நூ.

இல. வி. 28210

மதவே.... மிகுதியும் வனப்பும் ஒருவழி விளக்கலும்.

இளம்.

இச்சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,  அவையேயன்றி  இவ்விரு
பொருளும்படும் என்றவாறு.

‘மதகளிறு’ என்றக்கால் மிகுகளிறு என்பதாம்.

1‘இளம் பாண்டில்
தேரூரச் செம்மாந் ததுபோல் மதைஇயினன்’ (கலி. 109)

என்பது, வனப்புடயள் ஆயினள் என்பதாம்.

சேனா

இ-ள் : ‘மதவிடை’ (பெரும்பாண். 43) எனவும், ‘மாதர் வாண்முகம்
மதைஇய  நோக்கே’  (அகம்.  130)  எனவும் மடனும்  வலியுமேயன்றி
மிகுதியும் வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மையுணர்த்தும், எ-று.

‘மதவிடை’ என்புழி மிகுதி உள்ள மிகுதி.

தெய்

இ-ள் : மேற்சொல்லப்பட்ட   மத   என்னுஞ்    சொல்   மிகுதி
என்பதன் பொருளும் வனப்பு என்பதன் பொருளும்படும், எ-று.

உ-ம் : ‘பொருநா கிளம்பாண்டில் தேரூரச்  செம்மாந்தது  போன்
மதை  இயினன்’இது  மிகுதி.  ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’
(அகம். 130)இது வனப்பு.


1. பொருள் : இளைய எருது பாண்டில் என்னும் தேரை ஊரத் தன்
               இளமையால்     இறுக்குமாறு    போல இறுமாந்து
               அழகாலும் இளமையாலும் மிகுதியுடையளாய்