136

நச்.

இது எய்தியதன்மேற் சிறப்புவிதி.

இ-ள் : மிகுதியும்  வனப்பும்  ஆகலும்   உரித்தே -  மதமடனும்
வலியுமே யன்றி  மிகுதியும்  வனப்புமாகிய  குறிப்பும்    சிறுபான்மை
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பேராரா ஏற்றின் பொருநா கிளம்பாண்டில்
          தேரூரச் செம்மாந் ததுபோல் மதைஇயினன்’ (கலி. 109)
          ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ (அகம். 130)

எனவரும். இவையும் ஈறு திரிந்தன.

வெள்.

இ-ள் : மத  வென்னுஞ் சொல்  மடனும் வலியுமேயன்றி மிகுதியும்
வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மை யுணர்த்துதற்குரியதாம், எ-று.

உ-ம் : ‘மதவிடை’ எனவும். ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’
எனவும்  மத  வென்பது மிகுதியும்  வனப்புமாகிய  குறிப்புணர்த்தியது.
‘மதவிடை என்புழி மிகுதி’ என்றது உள்ள மிகுதியினை.

ஆதி.

பொருள் : மதவு - மதத்தைத்தழுவிய  மிகுதி,- வனப்புடைய.

யாணர்
 

373.

புதிது படற் பொருட்டே யாணர்க் கிளவி         (82) 
 

ஆ. மொ. இல.

The word ‘yāņar’ means new income.

ஆல்.  

The morpheme ‘yāņar’ gives the sense of newness.

இளம்.

வ-று : 1‘அறாஅ   யாணர்  அகன்றலை  நன்னாடு’  (அகம்  44)
என்றக்கால், அறாத புது வருவாயை யுடைய நாடு என்பதாம்.


1. பொருள் : நீங்காத புது வருவாயுடைய அகன்ற    இடமுடைய
               நல்ல நகர்.