137

சேனா.

இ-ள் :1‘மீனொடு  பெயரும்  யாணரூர’   (நற். 210)   எனயாணர்
என்பது வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : யாணர்   என்னுஞ்   சொல்   புதியது  படுதல்  என்னும்
பொருண்மையை யுடைத்து, எ-று.

உ-ம் : 2‘வித்தொடு  சென்ற  வட்டி  பற்பல,  மீனொடு  பெயரும்
யாணரூர’ (நற். 210) நாடொறும் புதியது படுகின்றவூர்.

நச்

இதுவுமது.

இ-ள் : யாணர்க்கிளவி   புதிது   படற் - பொருட்டே    யாணர்
என்னும் சொல்  வருவாய்  புதிதாகப்  படுதலாகிய  குறிப்பையுடைத்து,
எ-று.

உ-ம் : ‘வீகொடு சென்ற வட்டிற் பற்பல 
          மீனொடு பெயரும் யாணரூர’ (நற். 130).

எனவரும்.

வெள்.

இ-ள் : யாணர்   என்பது,   வருவாய்   புதிதாகப்   படுதலாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மீனொடு பெயரும் யாணரூர’ எனவரும்.

ஆதி.

பொருள் :யாணர் ............ புதிதான.

அமர்தல்
 

374.

அமர்தல் மேவல்                       (83)
 

ஆ.மொ.இல.

‘Amarthal’ is joining joyfully

ஆல்.

‘Amarthal’ means the joy of Companianship.


1. பொருள் : மீனொடு திரும்பி  வரும்  புது வருவாயுடைய  ஊர்.

2. பொருள் : விதைப்பதற்காக விதையுடன் சென்ற கூடைபற்பல
               வகையான மீனொடு  திரும்பும்  புது வருவாயுடைய
               ஊரனே.