இளம் வ-று : ‘கூழமர்ந் துண்டாள்’ என்பது கூழை 1மேவியுண்டாள் என்பதாம். சேனா இ-ள் :வரும் சூத்திரத்தோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. தெய் இ-ள் : அமர்தல் என்பது மேவல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : 2‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84) நச். இதுவுமது. இ-ள் : அமர்தல் மேவல் - அமர்தல் மேவுதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84) என வரும். வெள் இ-ள் : வரும் சூத்திரத்தோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. ஆதி. பொருள் : அமர்தல் - உட்கார்தல் - மேவிவரல். யாண்
|