சேனா (அமர்தல் மேவல், யாணுக்கவினாம்) இ-ள் : ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84) எனவும், ‘யாணது பசலை’ (நற். 50) எனவும் அமர்தலும் யாணும் முறையானே மேவுதலும் கவினுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் :யாணு என்னுஞ்சொல் கவின் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : யாணு விசும்பின் அமர ருளப்படப் பேணிப்பேணிப் பெரிதெனைப் பெட்டபின்- அழகிய விசும்பு என்றவாறு. நச். இதுவுமது. இ-ள் : யாணுக்கவின் ஆகும் - யாண் என்னும் சொல் கவினாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் :யாணது பசலை என்றனன் (நற். 50) வெள் (அமர்தல் மேவல், யாணுக் கவினாகும்) இ-ள் : அமர்தல் என்னும் சொல் மேவுதல் என்னும் குறிப்புணர்த்தும்; யாணு என்னுஞ் சொல் கவின் என்னும் குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : ‘அகனமர்ந்து செய்யாள் உறையும்’, என அமர்தல் மேவுதல் என்னும் குறிப்புணர்த்தியது. ‘யாணது பசலை’ என யாணு என்பது கவின் என்னும் குறிப்புணர்த்தியது. ஆதி பொருள் : யாண்.........அழகு. பரவு, பழிச்சு |