140

பி. இ. நூ.

இல. வி. 281-21

பரவும் பழிச்சும் வழுத்தின் குறிப் புணர்த்தலும்

முத்து. ஒ. 45

பரவும் பழிச்சும் வழுத்தல் மேன

இளம்

வ-று : ‘கடவுட் பரவினார்’ என்றக்கால், வழுத்தினார்  என்பதாம்.
 
          ‘கைதொழூஉப்     பழிச்சி’     (மதுரைக்  664)  என்றக்
கால்வழுத்தி என்பதாம்.

சேனா

இ-ள் : ‘நெல்லுகுத்துப்  பரவும்  கடவுளும்  இலவே  (புறம். 335)
எனவும்,  ‘கைதொழூஉப்  பழிச்சி’  (மதுரைக்.  664)  எனவும், பரவும்
பழிச்சும் வழுத்தலாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் :பரவலும் பழிச்சுதலும் வாழ்த்தலின் பொருள்படும், எ-று.

உ-ம் :‘கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி’ (மலைபடு 538).

நச்.

இதுவுமது.

இ-ள் : பரவும்  பழிச்சும்  வழுத்தின்  பொருள- பரவும்  பழிச்சும்
வழுத்துதல் என்னும் சொல்லினது குறிப்புப் பொருளையுடைய, எ-று.

உ-ம் :1‘கல்லே பரவின் அல்லது
          நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே’     (புறம். 335)
 
          ‘செறிவளை விறலியர் கைதொழூஉப் பழிச்சி
          வறிதுநெறி ஒரீஇ’

எனவரும்.


பொருள் :1. நடுகல்லை   வழுத்துவதல்லது   நெல்    சொரிந்து
               வழுத்தும் கடவுள் இல்லை.