141

வெள்

இ-ள் : பரவு   பழிச்சு   என்னும்   உரிச்சொற்கள்    இரண்டும்
ழுத்துதலாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நெல்லுகுத்துப்    பரவும்    கடவுளுமிலவே’    எனவும், ‘கைதொழூஉப் பழிச்சி’ எனவும் வழுத்துதலாகிய குறிப்புணர்த்தின.

ஆதி

பொருள் : பரவு - பரவிவரல் - வணக்கம்
             பழிச்சல் - பழித்தல் - வணங்கல், போற்றுதல்

கடி
 

377.
 

கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை

விரைவே விளக்க மிகுதி சிறப்பே

யச்ச முன்றேற் றாயீ ரைந்து

மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.     (86)

(கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை  
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்று ஆ ஈரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.)
 

ஆ. மொ. இல.

The    word ‘kadi’  is used  in  the   ten     senses      of
      excluding, sharpness, protection, newness, fastness,
      light,   excess,   excellence,   fear  and  vow.

ஆல்.

The     morpheme     Kati      means  the  following ten
     exclusion. sharpness, protection, newness,  fastness,
     light, excess, excellence, fear and vow.

பி. இ. நூ.

நேமி. சொ. 57

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மைபுரைதீர்
கரிப்பும் காப்பச்சம் தேற்றம் ஈராறும்
தெரிக்கிற் கடிச்சொற் றிறம்.