143

சேனா

இ-ள் : கடியென்னும்   உரிச்சொல்  வரைவு  முதலாகிய  பத்துக்
குறிப்பும் உணர்த்தும், எ-று.

உ-ம் :‘கடிந்த    கடிந்தொரார்    செய்தார்க்கு’   (குறள் 658)
எனவரைவும்,
    ‘கடிகா’ (கள வழி. 29) எனக் காப்பும்,  
    ‘கடிமலர்’ எனப்புதுமையும்,  
    ‘கடுமான்’ (அகம் 134) என விரைவும்,  
    ‘கடும் பகல்’ (அகம் 148) என விளக்கமும்,  
    ‘கடுங்கா லொற்றலின்’ (பதிற். 25) என மிகுதியும்,  
    ‘கடுநட்பு’ எனச் சிறப்பும்,  
    ‘கடியையால்    நெடுந்தகை   செருவத்தானே’ (பதிற்.  61)
என அச்சமும்,
    ‘கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வ நோக்கிக்  
    ‘கடுஞ்சூள்     தருகுவன் நினக்கே’ (அகம். 10) எனமுன் தேற்றும்
உணர்த்தியவாறு      கண்டு     கொள்க.   முன்றேற்றுபுறத்திலன்றித்
தெய்வமுதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல்.

தெய் :

இ-ள் : கடி என்னுஞ் சொல் வரைவு   முதலாக  முன்றேற் றீறாக
ஓதப்பட்ட  பத்துச்  சொல்லினும்  தெளியத்   தோன்றும்  பொருளை
யுடைத்து, எ-று.

உ-ம் : ‘கடிந்த  கடிந்தொரார்  செய்தார்க்  கவைதாம் முடிந்தாலும்
பீழை தரும்’ (குறள். 658)

- இது வரைவு

‘கடுநுனைப்பகழி’ -  இது  கூர்மை, கடி என்னும்  சொற்றானே கடு
எனத்திரிந்து வந்தது.
    ‘கடியில் புகூஉம் கள்வன் போல’ - இது காவல்
    ‘கடியுண் கடவுட் கிட்ட சிறு குரல்  
    அறியா துண்ட மஞ்ஞை’ (குறுந். 105) - இது புதிதுண்கடவுள்.  
    ‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்’ (புறம் 15) - இது விரைவு.  
    ‘கடும் பகல் (அகம் 148) - இது விளக்கம்  
    ‘கடுங்கால் ஒற்றலின்’ (பதிற். 25) - இது மிகுதி  
    ‘கடிகாவிற் பூச்சூடினன்’ -  இது சிறப்பு.  
    ‘கடும் பாம்பு வழங்குந் தெரு’ - இஃது அச்சம்  
    ‘கடுஞ்சூள்  தருகுவன்  நினக்கே’  (அகம் 110) - நீதெளியுமாறு
சூளுறுகின்றேன் - இது முன்தேற்று.