144

நச்.

இது, பெரும்பான்மை     குறிப்பும்    சிறுபான்மை    பண்பும்
உணர்த்துகின்றது.

இ-ள் : கடி  என்  கிளவி  வரைவே  கூர்மை  காப்பே  புதுமை
விரைவே   விளக்கம்    மிகுதி   சிறப்பே    அச்சம்   முன்தேற்று
ஆயீரைந்தும் மெய்ப்படத் தோன்றும்  பொருட்டாகும்மேகடி  என்னும்
சால் வரைவு கூர்மை   காப்பு   புதுமை  விரைவு  விளக்கம்  மிகுதி
சிறப்பு அச்சம் தய்வ    முதலியவற்றை     முன்னின்று தெளிவித்தல்
என்று கூறப்படுகின்ற    அப்பத்துச்   சொல்லும்   மெய்ம்மைப்படத்
தோன்றும் பொருண்மையினையுடைத்து, எ-று.

உ-ம் : ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ (குறள் 658)
       ‘கடிநுனைப் பகழி’
       ‘கடிமரம் தடியும் ஓசை’ (புறம் 36)
       ‘கடியுண் கடவுட்கிட்ட செழுங்குரல்’ (குறுந். 105)
       ‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்’ (புறம். 15)
       ‘கடும்பகல் ஞாயிறு’ (கலி. 145)
       ‘கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந்துருத்து’ (பதிற். 25)
       ‘அம்பு துஞ்சும் கடியரணால்’
       ‘கடியுருமின் உரறிக் கடிப்புச் சேர்பு
       'கடிய மன்ற நின் தழங்கு குரல் முரசம்’  
       ‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக்  
       'கடுஞ்சூள் தருகுவன் நினக்கே கானல்’ (அகம். 110)

என வரும். இவ்வுரிச்சொல் பெரும்பான்மை திரிந்து நிற்கும்.  

வெள்.

இ-ள் : கடி  என்னும்  உரிச்சொல் வரைவு கூர்மை காப்பு புதுமை
விரைவு  விளக்கம்  மிகுதி  சிறப்பு அச்சம் முன்தேற்று ஆகிய பத்துக்
குறிப்பும்          தன்கண்          புலப்படத்        தோன்றும்
பொருண்மையினையுடையதாகும், எ-று.

உ-ம் : ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ என வரைவும்’
       ‘கடிநுனைப் பகழி’ எனக் கூர்மையும்,
       ‘கடிகா’ எனக் காப்பும்,  
       ‘கடிமலர்’ எனப் புதுமையும்,
       ‘கடுமான்’ என விரைவும்,
       ‘கடும்பகல்’ என விளக்கமும்,
       ‘கடுங்கால் ஒற்றலின்’ என மிகுதியும்,