கிளவி மேற் கூறப்பட்ட பொருளேயன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்பும் கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கும் உரித்து, எ-று. தெய் இ-ள் : மேற் சொல்லப்பட்ட கடி என்னும் சொல் ஐயப் பொருண்மையும் கரித்தற் பொருண்மையும் ஆகலும் ஆம், எ-று. உ-ம் : 1‘போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது’ (குறள் 192) இது ஐயம். ‘கடி மிளகு தின்ற கல்லா மந்தி’ இது கரிப்பு. நச். இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. இ-ள் : ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே -கடி என்னும் சொல் முற்கூறிய பத்துமே யன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்பும் கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கும் உரித்து, எ-று. உ-ம் : ‘கடுத்தனள் அல்லளோ அன்னை’ ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ எனவரும். வெள் இ-ள் :(நச், உரையே) ஆதி பொருள் : கடி....ஐயுறல், கரிப்பு. ஐ |