147

இளம்

வ-று : ‘ஐதே காமம் யானே’ (நற். 143)என்றக்கால். வியக்கத்தக்கது
என்பதாம்.

சேனா.

இ-ள் : (சூ.  379,  380,   381,   382   எண்களுள்ளவற்றுக்குச்
சேர்த்து 382ல் உரை எழுதப்பட்டுள்ளது.  ஆண்டுக்காண்க)

தெய்.

இ-ள் : ஐ  என்பது  வியப்பு  என்பதன்  பொருள்படும்,  எ-று.

உ-ம் : ‘ஐ யென விம்மி யவற்கது கூறிய

       பொய்யில்   புகழோன்   புகழடி   கைகூப்பி’ -  வியப்பு
என்றது  விம்மி என்றவாறு.

நச்.

இது குறிப்பு.

இ-ள் : ஐ  வியப்பு  ஆகும் - ஐ வியப்பாகிய குறிப்பு உணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘ஐதே காமம் யானே’ (குறுந். 217)

வெள்

இ-ள் : (சூ. 382-ல் காண்க),

ஆதி.

பொருள் : ஐ - ஐந்து, அழகு - வியப்பு.

முனைவு
 

380.

முனைவு முனிவாகும்                    (89)

(முனைவு முனிவு ஆகும்)
 

ஆ.மொ. இல.

‘Munaivu’ means contempt.

ஆல்.

‘Munaivu’ means dislike

இளம்.

வ-று : 1‘சேற்று   நிலை  முனைஇய’  (அகம். 46)   என்றக்கால்,
சேற்றுநிலை முனிந்த என்பதாம். 


1, பொருள் : சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்ணையுடைய
               எருமை.