149

நச்

இதுவுமது.

இ-ள் :வையே கூர்மை - வை கூர்மையாகிய குறிப்புணர்த்தும்,
எ-று.

உ-ம் : ‘வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து (முல்லை 73)
எனவரும்.

வெள்

இ-ள் :(சூ. 382-ல் காண்க.)

ஆதி

பொருள் : வை - திட்டு, அங்குவை - கூர்மையான.

எறுழ்
 

382.

எறுழ் வலி யாகும்                         (91)
 

ஆ. மொ. இல.

‘Eŗul’ means strength

ஆல்.

‘Eŗul’ means strength

இளம்.

வ-று : ‘வாளுடை   யெறுழ்த்தோள்’   என்றக்கால்,  வலியுடைய
தோள் என்பதாம்.

சேனா.

(சூ. 379, 380, 381, 382-ன் உரை)

இ-ள் : ‘ஐதே காமம் யானே’ (நற். 143)  எனவும்,  ‘சேற்று நிலை
முனைஇய  செங்கட்காரான்’  (அகம். 46) எனவும், ‘வைநுனைப் பகழி’
(முல்லை.  73)  எனவும்,  ‘போரெறுழ்த்திணிதோள்’ (பெரும்பாண். 63)
எனவும்  ஐ  முதலாயின முறையானே வியப்பும் முனிவும்  கூர்மையும்
வலியுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் :எறுழ் என்பது வலி என்பதன் பொருள்படும், எ-று.

உ-ம் : ‘போரெ நுழ்த் திணிதோள்’ (பெரும்பாண். 63).

நச்.

இதுவுமது.

இ-ள் :எறுழ் வலி ஆகும் - எறுழ் வலியாகிய குறிப்புணர்த்தும்,
எ-று.