உ-ம் :1‘சிலை நவில் எறுழ்ந்தோள் ஓச்சி வலன் வளையூ’ எனவரும். வெள். (சூ. 379, 380, 381, 382-ன் உரை) இ-ள் : ஐ என்பது வியப்பு உணர்த்தும், முனைவு என்பது முனிவு உணர்த்தும்; வை என்பது கூர்மையுணர்த்தும்; எறுழ் என்பது வலியுணர்த்தும், எ-று. உ-ம் : ‘ஐதே காமம் யானே’ எனவும், ‘சேற்று நிலை முனை இய செங்கட்காரான்’ எனவும், ‘வைநுனைப் பகழி’ எனவும், ‘போரெறுழ்த் திணிதோள்’ எனவும், ஐ, முனைவு, வை, எறுழ் என்னும் உரிச்சொற்கள் முறையே வியப்பு, முனிவு, கூர்மை, வலி ஆகிய குறிப்புணர்த்தின. ஆதி. பொருள் : எறுழ்............ பலத்த வலிய. உரிச்சொற்களுக்குப் புறனடை |
ஆ. மொ. இல. All the semantemes, which are discussed to be understood, denote their meanings with the help of the suitable words which appear before and after them in accordance with the usage. ஆல் All the free morphemes whose meanings have been indicated should be understood by examining what comes following and preceding them and thus the appropriate meaning should be taken. Then the meaning would appear in the proper erspective.
1. பொருள் : மலையை யொத்த வலிய தோள் ஓச்சி வலமாக வளைத்து. |