151

பி. இ. நூ.

இல. வி. 287

மெய்பெறக் கிளந்த வுரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியால் புணர்த்தன ருணர்த்தல்
தத்த மரபிற் தோன்றுமன் பொருளே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது புறனடை.

உரை : பொருள்மேற் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும்
முன்னைச்  சொல்  பின்னைச்  சொல்  நோக்கி,  அதற்கு  இயைந்த
மொழிநாடி,    அவற்றொடு    புணர்த்து    உணர்த்துக.   அவ்வாறு
உணர்த்தவே  தத்தம்  மரபிற்றிரியாப்  பொருள்  வாய்த்  தோன்றும்;
அவ்வாறு  தெரிந்து  உணராக்கால்  கொள்ளாதாம்  கருதிய  பொருள்
என்பது.

யாதோ     கொள்ளாதவாறெனின், ‘கடியுடை வியனகர், (புறம் 95)
என்றக்கால்,  கடி  என்பது  கூர்மையும்  விரைவும்  படுமால் என்று.
நகரத்துக்கண்  அவை  யேற்றற்க;  காப்புடை  நகர்  என்று கொள்க,
அதற்கு ஒத்த மொழியாகலின் என்பது.

சேனா

இ-ள் :  இச்சொல்   இப்பொருட்   குரித்தென  மேற்கூறப்பட்ட
உரிச்சொல்  எல்லாவற்றையும்,  அவற்று  முன்னும்  பின்னும்  வரும்
மொழிகளை  ஆராய்ந்து,  அம்மொழிகளுள்  தக்க மொழியானே ஒரு
பொருள்      உணர்த்துக;     இவ்வாறுணர்த்தவே,     வரலாற்று
முறைமையாற்றத்தமக்குரித்தாய் பொருள் விளங்கும், எ-று.

இஃது    என்   சொல்லியவாறோவெனின்.   ‘உறுதவ  நனியென
வரூஉ மூன்றும்  மிகுதி  செய்யும் பொருள வென்ப’ (உரி. 3) எனவும்,
செல்ல லின்ன  லின்னா  மையே’  (உரி.  6)  எனவும்  ஓதிய  வழி,
அவை வழக்கிடைப்   பயின்ற  சொல்லன்மையான்  இவை  மிகுதியும்
இன்னாமையும்     உணர்த்தும்      என்று     ஆசிரியராணையாற்
கொள்வதல்லது  வரலாற்றாற் பொருளுணர்த்தும் எனப்படாவோ என்று
ஐயுறுவார்க்கு.  ‘உறுகால்’  (நற்.  37).  ‘தவப்பல’  (புறம்  235),  ‘நனி
சேய்த்து’  (ஐங்.  443)  எனவும்,  ‘மணங்கமழ்  வியன்மார் பணங்கிய
செல்லல்’  (அகம் 22) எனவும், முன்னும் பின்னும் வரும்  சொல் நாடி
அவற்றுள்    இச்சொல்லோடு   இவ்வுரிச்சொல்   இயையும்   என்று
கடைப்பிடிக்கத்,  தாம் புணர்த்த சொற்கேற்ற பொருள்  விளங்குதலின்,
உரிச்சொல்லும்