154

384.

கூறிய கிளவிப் பொருணிலை யல்லது
வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே        (93)

(கூறிய கிளவிப் பொருள்நிலை அல்லது
வேறுபிற தோன்றினும் அவற்றொடு கொளலே)
 

ஆ. மொ. இல.

If such other means other than those described here
appear, they may be accepted.

ஆல்.

The  meanings   so   far  given  are not restrictive. If
there are other meanings we must take them.

பி. இ. நூ.

இல. வி. 288

கூறிய கிளவிப் பொருள்நிலை யல்ல
வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே.

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை.

உரை : சொல்லிப் போந்த உரிச்சொற்கள்  அவ்வுரிய  எனப்பட்ட
பொருளின்  ஆகாது வேறு வேறுபட்ட பொருளினவாய்த் தோன்றினும்
அச்சொல்லப்பட்ட  பொருளொடு  படுத்துப் பொருள்படுமாறு அறிந்து
கொள்க என்பதாம்.

‘புரைபட்ட’     என்புழிப்  புரை   என்பது  ஈண்டுப்   பிளவுப்
பொருண்மையை     விளக்கிற்றாகலின்     இதனையும்    உயர்வுப்
பொருண்மையோடு  புணர்த்து இருபொருளும் அச்சொற்குப் பொருள்
என்று கொள்க என்பதாம். இனிக்

‘கண் கதழ வெழுதினார்’

என்புழி ஆண்டு விரைந்தெழுதினார்  என்று  விரைவிற்  பொருள்
கொள்ளற்க; சிறப்ப எழுதினார் என்று கொள்க. பிறவும் அன்ன.

சேனா

இ-ள் : முன்னும் பின்னும் வருபவை நாடிய வழி,  உரிச்சொற்குக்
கூறப்பட்ட   பொருளே   யன்றிப்   பிறபொருள்   தோன்றுமாயினும்
கூறப்பட்ட வற்றோடு அவற்றையும் கொள்க, எ-று.

உ-ம் : ‘கடி நாறும்  பூந்துணர்’ என்ற வழிக் கடிஎன்பது முன்னும்
பின்னும் வருபவை நாட, வரைவு முதலாயின பொருட்