கேலாது மணப்பொருட்டாயினவாறு கண்டு கொள்க. பிறவு மன்ன. தெய் இதுவுமது. இ-ள் : மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு ஓதப்பட்ட பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் சொல்லப்பட்டனவற்றோடு ஒரு நிகரனவாகக் கொள்க, எ-று. உ-ம் : 1‘பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை’ என்ற வழிப், ‘பேஎ’ என்பது மிகுதி குறித்து நின்றது. ‘பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல்’ என்ற வழிப் புனிறு என்பது புதுமையின் கண் வந்தது. ‘கடிமலர்’ என்ற வழி மணத்தின் கண் வந்தது. ‘மேன் முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந்தார்’ என்ற வழிக் கடி யென்பது வதுவையின் கண் வந்தது. ‘தூவற் கலித்த தேம்பாய் புன்னை’ (புறம் 24) என்ற வழிக் கலித்தல் தழைப்பின்கண் வந்தது. ‘அடர்பொன் அவிர் ஏய்க்கும் அவ்வரி வாட’ (பாலைக்கலி, 22) என்ற வழி அரி என்பது நிறத்தின் கண் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. நச் இதுவுமது. இ-ள் : கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல வேறுபிற தோன்றினும்- முன்னும் பின்னும் வருபவை நாடியவழி முற்கூறிய உரிச் சொற்களின் பொருள் நிலைமை அல்லாத வேறு பிற பொருள் தோன்றுமாயினும், அவற்றொடு கொளல்- அக் கூறப்பட்டனவற்றோடே அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க, எ-று. உ-ம் : ‘கடிநாறும் பூந்துணர்’ என்றால், முற்கூறியவற்றிற்கு ஏலாது மணப் பொருட்டு ஆயிற்று. ‘மரம் புரை பட்டது’ என்பது உயர்வுப் பொருள் குறித்தது என்று கொள்ளற்க; பொந்து பட்டது என்னும் பொருட்டாயிற்று.
1. பொருள் : மிகுதியாகத் தோன்றும் ஆழ்ந்த நீருடைய குளிர்ந்த சுனை |