இவையே யன்றி வேறு பிற தோன்றினவை அவ்வச்சூத்திரங்களுள் காட்டிப் போந்தாம்; அவற்றான் உணர்க. வெள் இ-ள் : (உரிச்சொற்களின் முன்னும் பின்னும் வரும் சொற்களை நாடிய வழி) முற்கூறிய உரிச் சொற்களின் பொருள் நிலைமை யல்லாது வேறு பிற பொருள் தோன்றுமாயினும் முற்கூறப்பட்டவற்றோடு அவற்றையுங் கொள்க, எ-று. உ-ம் : ‘கடி நாறும் பூந்துணர்’ என்றவழிக் கடி என்பது நாறும என்ற சொல்லின் சார்பால் முற்கூறப்பட்ட பொருள் பயவாது நறுமணம் என்ற பொருள் தந்தது. ‘மரம் புரைபட்டது’ என்புழிப் புரைபட்டது என்பது உயர்வு பொருள் தராது பொந்துபட்டது என்ற பொருள் தந்தது. இவ்வாறே இங்குக் கூறிய உரிச் சொற்கள் கூறப்படாத வேறு பொருளும் தருதலை இடம் நோக்கியுணர்ந்து கொள்க. ஆதி. முன் கூறிய சொற்பொருள் இத்துணை என்று கட்டுப்பாடு அல்ல பிற பொருள் தோன்றினும் அவற்றோடு கொள்க. வெறுப்புசெறிவு எனப் பொருள். அஃது வெறுக்கையாகிச் செல்வம் எனப் பொருள் தரும். இஃதே பிற பொருள் தோன்றல். பொருட்குப் பொருள் |