158

நச்.

இச்சூத்திரம் முதல் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல்’ (உரி. 97) என்னுஞ  
சூத்திரத்  தளவும் முற்கூறிய நால்வகைச் சொல்லையும் உணருமாறும்,
உணர்த்துமாறும்     அவற்றின்    தன்மையும்    உணர்த்துகின்றார்,
மேற்கூறுகின்ற   பொது   இலக்கணமாகிய   எச்ச   இயற்கு   ஏற்ப
அதிகாரப்பட்டமை கருதி.

இ-ள் : பொருட்குப்  பொருள்  தெரியின்  ஒரு  சொல்லை  ஒரு
சொல்லானும்  பல சொல்லானும் உணர்த்தியவழிப் பொருள் உணர்த்த
வந்த  சொற்கும்  பொருள் யாது எனப் பொருள் தெரியுமாயின், அது
வரம்பு   இன்று  அங்ஙனந்  தெரிதல்  வரம்பின்றோடும்;  அதனால்
பொருட்குப் பொருள் தெரியற்க, எ-று.

ஒரு     சொற்கு ஒரு சொல்லானும் பல  சொல்லானும்  பொருள்
உணர்த்தினாலும்  உணரும்  உணர்வு  இல்லாதானை  உணர்த்துமாறு
மேற்கூறுகின்றார்.

வெள்.

இது   பயிலாத  சொற்களைப்  பயின்ற   சொற்களோடு சார்த்திப்
பொருளுணர்த்துங்காற்படும் முறைமை யுணர்த்துகின்றது.

இ-ள் : ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளுணர்த்திய   வழி
அப் பொருளுணர்த்த   வந்த   சொற்கும்  பொருள்  யாது?  எனப்
பொருளுக்குப்  பொருள்  தெரிய  வினவுமாயின்  அவ்வினா,  விடை
கூறுதற்குரிய  வரம்பின்றியோடும்;  ஆதலால்  பொருட்குப்  பொருள்
தெரியற்க, எறு.

உறு   தவ  நனி  என்பனவற்றை  மிகுதிப்  பொருள   என்றார்,
ஆசிரியர். மிகுதியாவது யாது? என ஒருவன் வினாவின், ஒன்றை விடப்
பெரியது என்னலாம்,   அதனைக்   கேட்டு    அமையாது,   பெரிது 
எனப்படுவது யாது?  என   அவன்  மீண்டும்  வினவின்  அவனுக்கு
மேலும்   மேலும்  சொற்களால்   பொருள்  விளக்குதல்  வரையறை
யில்லாமற்  போம் என்பதாம்.

ஒரு   சொற்கு  ஒரு  சொல்லாலும்  பல  சொல்லாலும்  பொருள்
உணர்த்தினாலும்    உணரும்   உணர்வில்லாதானை   உணர்த்துமாறு
வருஞ்சூத்திரத்தாற் கூறப்படும்.

ஆதி.

கண்ட பொருளுக்கு விரிவாகப்  பொருள்  பார்த்து  நிற்பின் அது
வரம்பு மீறிப் போய்விடும்.

கடி - விளக்கம் கடிமார்பு.
வாள்- ஒளி பொருந்திய