159

இரண்டு  பொருளையும் இணைத்து  வாள்  மார்பு  என்னலாமோ
ஆகாது; இது வரம்பற்ற செயல்.
 

386.

பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின்       (95)

(பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்)
 

ஆ. மொ. இல.

If  taught   clearly,   there  will be no  confusion  in
knowing the meaning of the word.

ஆல் :

The  meaning  will  not get confused if the  listener
gets the sense of the speaker.

பி. இ. நூ.

இல. வி. 292

பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின்

இளம்

இச்  சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுமேற்  சூத்திரத்திற்குப்
புறனடை.

உரை : உரிச்சொல்  பிறிதலது,  அது   பொருள்    உணருமாறு
வல்லாற்குப்  பிற  சொற் கொணர்ந்து பொருள் உணர்த்தல் வேண்டா;
திரிபின்றி அச் சொல்லினானே உணரப்படும், எ-று.

என்னை? உறு என்ற பதம் மிகுதிப் பொருட்கு என்றக்கால்,  அம்
மிகுதியையும்  அதனானே  யுணரலாம்;  உணருமாறு வல்லாற்குப் பிற
சொற் கொணர்ந்து உரைத்தல் வேண்டா என்பது.

சேனா.

இ-ள் : ‘உறுகால்’  (நற். 37)  என்புழி  உறு  என்னும்  சொற்குப்
பொருளாகிய  மிகுதி என்பதன் பொருளும் அறியாத  மடவோனாயின்,
அவ்வாறு ஒரு பொருட் கிளவி கொணர்ந்துணர்த்த லுறாது’கடுங்காலது
வலி  கண்டாய்,  ஈண்டு  உறு  என்பதற்குப் பொருள்’ என்று தொடர்
மொழி    கூறியானும்,    கடுங்கால்   உள்   வழிக்   காட்டியானும்
அம்மாணாக்கன்   உணரும்   வாயிலறிந்து  உணர்தல்  வல்லனாயின்
அப்பொருள் திரிவு படாமல் அவன் உணரும், எ-று.

அவற்றானும் உணர்தலாற்றாதானை யுணர்த்துமாறு என்னையெனின்,
அதற்கென்றேவருஞ்சூத்திரம்எழுந்ததென்பது.