162

387.

உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே            (96)

(உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே)
 

ஆ. மொ. இல.

Knowing the meaning depends upon the skill of  the
learner

ஆல்

The  meaning  depends  on  the  strength    of    the
feelings conveyed.

பி. இ. நூ.

இல. வி. 293

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் புறனடை;

யாஞ் சொல்லிய சொல் வாயிலே பற்றி யுணர்த்துக. அத்துணையால்
உணர்வார்க்கு    அதுவே    உணர்ச்சி   வாயிலாம்.   அல்லாக்கால்
அவ்வுணர்வோரை வலித்தாமாற்றால் உணர்த்துக என்பதாம்.

என்னை?

‘பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ (உரி. 85)

என்பதனால்     உணராத   மடவோரை மற்றொரு   வாய்பாட்டால்
உணர்த்துக; அல்லாக்கால் மேல்நோக்கிச் சில மலர்கொடு தூவிக்காட்ட
வுணருமேல் அஃதே உணர்ச்சி வாயிலாக அறிக என்பது.

சேனா.

இ-ள் : வெளிப்படத்   தொடர்மொழி   கூறியானும்  பொருளைக்
காட்டியானும்   உணர்த்தவும்   உணராதானை  உணர்த்தும்  வாயில்
இல்லை;  உணர்ச்சியது  வாயில்  உணர்வோரது  உணர்வை வலியாக
வுடைத்தாகலான், எ-று.

யாதானும் ஓர்   ஆற்றான்  உணருந்தன்மை  அவற்கில்லையாயின்
அவனை உணர்த்தற் பாலன் அல்லன் என்றவாறு.

தெய்.

மாணாக்கர்க்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உணர்ச்சி என்பது  உணர்வு.  வாயில்   என்பது   புலன்;
அஃதாவது    உணரப்படுவது.    உணர்வோர்    வலித்து   என்பது
உணர்வோரது வலிமையுடைத்து, எ-று.