163

என்றது,   பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்துகின்றுழி,
பயின்றவாக  ஓதப்பட்டன,  யாதும்  அறியாதாரை  நோக்கின  வல்ல;
உணர்வினான்    உணரப்படுவனவற்றை    யுணர்வாரை    நோக்கிக்
கூறப்பட்ட என்றவாறு. எனவே மேற்கூறிய கடா விடைபெற்றதாம்.

நச்.

இதுவும் அது.

இ-ள் : உணர்ச்சி  வாயில்நால்வகைச்  சொல்லையும்  மாணாக்கன்
உணர்தற்குக்  கூறிய  இவ்விலக்கணம்,  உணர்வோர்  வலித்துதன்னை
உணர்வோரது உணர்வைத் தனக்கு வாயிலாக வுடைத்து, எ-று.

எனவே,   தன்னை   உணரும்   உணர்வு  இல்லாதானுக்குத்தான்
சொல்வது  பயன்படாது  ஆகலின்,  அதனை  அவற்கு  உணர்த்தற்கு
என்பது பொருளாயிற்று.

இத்துணையும் உணருமாறும் உணர்த்துமாறும் உணர்த்தினார்.

வெள்.

இதுவுமது.

இ-ள் : வெளிப்படத் தொடர்மொழி கூறியோ அல்லது  பொருளை
நேரிற்    காட்டியோ   உணர்த்தவும்   உணராதானை   உணர்த்தும்
வழியில்லை;   உணர்ச்சியது   வாயில்   உணர்வோரது  உணர்வினை
வலியாகவுடைத்தாகலான், எ-று.

யாதானும் ஒருவழியானும்    உணரும்    தன்மை    ஒருவர்க்கு
இல்லையாயின் அவர்க்கு உணர்த்துதல் பயனில் செயல் என்பதாம்.

ஆதி

அவரவர் அறிவின்     உணர்ச்சி    கொண்டே    உண்மையை
உணர்வோரின் திறன் அமைந்துளது.

மடஅன்னம் உணராதார் பேதைமை  கொண்ட  அன்னம்  என்பர்.
உணர்திறன் உடையார் இளம்பருவத்து அன்னம் என்பர்.
 

388.

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா     (97)

(மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா).
 

ஆ. மொ. இல.

The origin of the world cannot be known easily.