164

ஆல்.

The  origin   of   the   meaning   of   a  word  is  never
certain Semantic units.

பி. இ. நூ.

இல. வி. 294

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இதுவும் புறனடை.

உரை : மொழிப்    பொருள்கள்  என்பன   அச்சொல்லப்பட்ட
பொருள்கள் அப்பொருட்கட்டே என்றவாறாம்.

சேனா.

இ-ள் : உறு  தவ  முதலாயின  சொற்கு   மிகுதி    முதலாயின
பொருளாதல்   வரலாற்று   முறைமையாற்   கொள்வதல்லது,  அவை
அப்பொருளவாதற்குக் காரணம் விளங்கத் தோன்றா, எ-று.

பொருளொடு      சொற்கு      இயைபு      இயற்கையாகலான்
அவ்வியற்கையாகிய    இயைபாற்   சொற்பொருளுணர்த்தும்   என்ப
ஒருசாரார்.  ஒருசாரார் பிறகாரணத்தான் உணர்த்தும் என்ப. அவற்றுள்
மெய்ம்மையாகிய     காரணம்    ஆசிரியர்க்குப்    புலனாவதல்லது
நம்மனோர்க்குப் புலனாகாமையின், ‘மொழிப்பொருட்காரணம் இல்லை’
என்னாது,     ‘விழிப்பத்     தோன்றா’    என்றார்.   அக்காரணம்
பொருவகையான்     ஒன்றாயினும்    சொற்றொறும்    உண்மையிற்
சிறப்புவகையாற்   பலவாம்;   அதனான்  ‘விழிப்பத்தோன்றா’  எனப்
பன்மையாற் கூறினார்.

உரிச் சொற்    பற்றியோதினாரேனும்   ஏனைச்சொற்பொருட்கும்
இஃதொக்கும்.

தெய்.

உரிச்சொற்கு உரியதோர் இலக்கணம்   உணர்த்துதல்   நுதலிற்று.

‘வந்தது கொண்டு வாராதது   முடித்தல்’   என்பதனால்  பெயர்ச்
சொற்கு உரிய இலக்கணமும் உணர்த்திற்றென்று கொள்ளப்படும்.

இ-ள் : இச்சொற்குப் பொருள் இதுவென  நியமித்தற்குக் காரணம்
விளங்கத் தோன்றா, எ-று.