165

எனவே, காரணம் உளது என்பதூஉ-ம்,அது புலனாகாதென்பதூஉ-ம்
கூறியவாறாம்.  என்னை  புலனாகாமை யெனின், மிகுதல் என்பதற்குப்
பொருளாவது  முன்பு  நின்ற  நிலையிற் பெரிதாதல் அப்பொருண்மை
அச்சொற்  காட்டுதற்குக்  காரணம்  உரைப்  பரிதாகலான்.  அஃதேல்
காரணம்   உளபோலக்   கூறியவதனாற்  பயன்  என்னை  யெனின்,
பொருண்மேற்  சொல்  நிகழ்தல் தொன்று தொட்டு வருகின்றதாதலின்,
உலகினுள்  மிக்காரெல்லாரும்  காரணமின்றி  வழங்குபவோ  என்னும்
ஐயம் குறித்துக் கூறினார்.

அஃதேல்,     இன்ன   எழுத்து    இப்பொருள்படும்   எனவும்,
இத்தன்மைத்து  எனவும், இப்பயன்தரும் எனவும் மற்றை  நூலகத்தும்
பிறாண்டும்  உரைக்கப்படு  மாகலான், காரணம் உரைப்பரிது என்பது
குற்றம் எனின், அதற்கு விடை வருகின்றசூத்திரத்தான் விளங்கும்.

நச்.

இது, சொற்  பொருள்   உணர்த்துங்   காரணம்   ஆசிரியர்க்கே
புலப்படும் என்கின்றது.

இ-ள் : மொழிப்  பொருட்  காரணம்  நால்வகைச்  சொல்லுக்கும்
பொருளை  அறிவித்து  நிற்கின்றதோர்  காரணம்  உண்டாந் தன்மை,
விழிப்பத்   தோன்றா  நுண்ணுணர்வு  இல்லாதோர்க்கு  மரபு  என்று
கொள்வது அல்லது விளங்கத் தோன்றா, எ-று.

எனவே, நுண்ணுணர்வுடையோர்க்குக் காரணம் உண்டாம்  தன்மை
விளங்கத் தோன்றும் என்பது பொருளாயிற்று.

இது மரபு என்று கோடல் ‘நிலந்தீ நீர்வளி’ (மரபியல். 89) என்னும்
மரபியற் சூத்திரத்தினாலும் ஆசிரியர் உணர்த்தினார்.

உலகத்துப் பொருள்களின் நிகழ்ச்சிக்குச் சொல் காரணம்  ஆகலின்,
‘மொழிப் பொருட் காரணம்’ என்றார். இக்காரணம் அக்காரியங்களோடு
இயைந்து நிற்கின்ற தன்மை ஆசிரியர்க்கு அல்லது  புலப்படாமையின்,
‘விழிப்பத் தோன்றா’ என்றார்.

வெள்.

இது சொற்கள் காரணம் உடையன என்பது கூறுகின்றது.

இ-ள் : உறு தவ முதலாயின  சொற்களுக்கு  மிகுதி   முதலாயின
பொருளாதல்   வரலாற்று   முறைமையாற்   கொள்வதல்லது  அவை
அப்பொருளினை  யுடையவாதற்குரிய  காரணம்  விளங்கத் தோன்றா,
எ-று.