166

விழிப்பத் தோன்றுதல் - விளங்கத் தோன்றுதல்

‘உரிச்சொற்     பற்றியோதினாரேனும் ஏனையச் சொற்பொருட்கும்
இஃது  ஒக்கும்’  என  இச்சூத்திரத்துச்சேனாவரையர்  கூறும் உரைக்
குறிப்பினை   யுளங்கொண்ட   நச்சினார்க்கினியர்  மேற்  கூறுகின்ற
பொதுவிலக்கணமாகிய  எச்சவியற்கு ஏற்பஅதிகாரப் பட்டமை நோக்கி
இவ்வியலில்   ‘பொருட்குப்   பொருள்   தெரியின்’  என்பது  முதல்
‘எழுத்துப்     பிரிந்திசைத்தல்’     என்பது    வரையுள்ள    ஐந்து
சூத்திரங்களிலும்  முற்கூறிய  நால்வகைச் சொல்லையும் உணருமாறும்
உணர்த்துமாறும்   அவற்றின்   தன்மையும்  உணர்த்துகின்றார்  என
விளக்கியுள்ளார்.

ஆதி.

சொல்லுக்கு     அப்பொருள் வந்த காரணத்தை விளக்க முடியாது.
‘செல்லல்     இன்னல்    இன்னாமையே’    செல்போ    ஆதலின்
செல்லல்போதல்.

இனிமை + நல் = இன்னல் = இனிய  நல்ல;  இவ்வாறு  பொருள்
இருக்க   இன்னல்   துன்பப்பொருள்   தருவது  எப்படி?  காரணம்
கிடையாது.  உரிச்  சொல்லைக் காரணப் பெயராக எடுத்துப் பொருள்
பார்த்தல் ஆகாது.
 

389.

எழுத்துப் பிரிந் திசைத்த லிவணியல் பின்றே     (98)

(எழுத்து பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே)
 

ஆ. மொ. இல.

The semanlemes being divided  into   phonemes
cannot make sense.

ஆல்

It  is  not  in  the  nature of this morpheme to be
divided into meaningful units.

பி. இ. நூ.

இல. வி. 289.

எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், புறனடைபோல்வதோர்  விதி
கூறுதல் நுதலிற்று.

உரை : எழுத்துக்கள் பிரிந்திசைக்கப்படா, எ-று.

உரிச்சொல் என்றவை   பிறிதிலக்கணமும்    உடைய    என்பது
போந்ததாம்; என்னை பிறிதிலக்கணம் எனின், ‘தம் மீறு