திரிதலும் பிறிதவண் நிலையலும்’ உடைய இவையும் என்பது. யாதோ எனின், கடியென் கிளவி. ‘கடும்புனல்’ என்றாயிற்று. நம்பு எனப்பட்டது நம்பி என்றாயிற்று. பிறவும் அன்ன. இனி, ‘உரு கெழு தேற்றம்’ என்புழி உரு என்பதூஉ-ம் கெழு என்பதூஉ-ம் உரிச்சொல். சேனா. இ-ள் : முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்தல் உரிச்சொல்லிடத்தியைபுடைத்தன்று, எ-று. ‘இவணியல் பின்று’ எனவே, எழுத்துப் பிரிந்து பொருளுணர்தல் பிறாண்டு இயைபுடைத் தென்பதாம். அவையாவன : வினைச்சொல்லும் ஒட்டுப் பெயருமாம். பிரிதலும் பிரியாமையும் பொருளுணர்த்துவனவற்றிற்கே யாதலின், 1‘கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாவாறு போல, இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி எய்தாமையறிக. தவ நனி என்னும் தொடக்கத்தன் குறிப்பு வினையெச்சம் போலப் பொருளுணர்த்தலின், அவை போலப் பிரிக்கப்படுங்கொல்லோ வென்றையுறாமை ஐயமகற்றியவாறு. தெய். எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : ஒரு சொற்கு அங்கமாகிய எழுத்துப் பிரிந்து நின்று பொருள்பட ஒலித்தல் இத்தமிழகத்தில் இல்லை, எ-று. எனவே, மேல் எழுந்த கடா விடை பெற்றதாம். பொருட்குப் பொருள் தெரியின் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்து மாறாம்.
1. இவ்வழிச்செல்வார் கூறை கோட்படுவர் (ஆடை கள்வரால் பறிக்கப்படுவர்). என்றால் கூறை கோட்படுதல் கடவுளர்க்கு ஆகாது. அவரை விட்டு மற்றை மக்களையே கொள்ளல் வேண்டும், அதுபோல எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் (உரிச்சொல்லுக்கு) இயல்பில்லையென்றால் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச் சொற்களுக்கு இயல்பாம் என்பது பெறப்படும். ஆயினும் இடைச்சொல் பிரிதலும் பிரியாமையும் ஆகிய இருநிலைகள் உடையதன்றாதலின் அதை விட்டுப் பிரிதலும் பிரியாமையுமாகிய இருநிலையுடைய பெயர் வினைகளே கொள்ளப்படும். |