ஆதி. எழுத்துகளாகப் பிரிந்து (பகுபதமாக்கிப்) பார்த்தல் உரிச்சொல்லில் கிடையாது. கெடவரல்- கெட+வரல் எனப் பிரித்துப் பார்த்தல் ஆகாது. எய்யாமை - அறியாமையாயின், எய்- அறி எனப் பிரித்துப் பொருள் கோடல் ஆகாது. ஆகலின் உரிச்சொற்களை அவ்வாறே பொருள் உணர்தல் வேண்டும். இஃதும் அவற்றின் தனியுரிமை. உரியியற்புறனடை |