‘பொருட்குறை... இன்மையின் என்பது, பொருட்குறை படாமற் கூட்ட வழக்கியன்ற மருங்கின் இத்துணையென வரையறுக்கு நிலைமை தமக்கு இல்லையாகலான், எறு. இதனானே எடுத்தோதல் அரிதாயிற்று. ‘வழிநனி கடைப்பிடித்து’ என்பது, சான்றோர் செய்யுட்கண் வந்த நெறியை மிகவும் கடைப்பிடித்து, எ-று. ‘ஓம்படை ஆணையில்’ என்பது - ஓம்படை என்பது பாதுகாவல். ஆணை என்பது விதி. பாதுகாத்தலாக எடுத்தோதப்பட்ட புறனடைச் சூத்திர விதியினால், எறு. அஃதாவது முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்தமொழியாற் புணர்த்தல் என மேற் கூறப்பட்டது. ‘கிளந்தவற்றியலான்’ என்பது பொருளுணர்த்துதற்குக் கருவியாகக் கூறப்பட்ட சொல்லானும் குறிப்பானும் பண்பானும் எ-று. ‘பாங்குற வுணர்தல் என்மனார் புலவர்’ என்பது பாங்குபட அறிக என்று சொல்லுவர் புலவர், எ-று. இதன் பொழிப்பு: எடுத்தோதப்படாத உரிச்சொல் எல்லாம் ஈண்டுப் பொருட்குறை படாமல் எடுத்தோதக் கருதின், அவை எல்லையிலவாதலான், அவை செய்யுளகத்து வழங்கிய நெறியைக் கடைப்பிடித்து, நாம் அதிகாரப் புறனடையாகச் சொன்ன ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்’ என்னும் விதியினாலும் குறிப்பானும் பண்பானும் பொருள்படுமாறு அறிந்து கொள்க, எ-று. ‘கழுதுருவின கஞலிலையன கழி மடலின கைதை’ என்ற வழிக், கஞல் என்பது நெருக்கம் குறித்து நின்றது. ‘ஒல்லும் வகையான் அறவினை யோவாதே’ (குறள் 33) என்ற வழி ஓவல் என்பது செய்யப்படும் என்பது குறித்து நின்றது. ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்’ (புறம் 165) என்ற வழி மன் என்பது நிலைபெறுதல் குறித்து நின்றது. ‘இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா (புறம் 44) என்ற வழி இருமை என்பது பெருமை குறித்து நின்றது. ‘அஞ்செங் குவளைக் கண்போல் ஆயிதழ்’ என்ற வழி அம் என்பது அழகு குறித்து நின்றது. ‘வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு’ (அகம் 11) என்ற வழி வயங்கென்பதூஉ-ம் அவிர் என்பதூஉ-ம் விளக்கங் குறித்தன. அம் |