என்பது நுணுக்கங் குறித்தது. உருப்பு என்பது வெம்மை குறித்தது. ‘ஊரவர் கவ்வை யெருவாக’ (குறள் 1147) என்ற வழி கவ்வை என்பது அலர் குறித்து நின்றது. ‘பொருளானாம் எல்லாம்என் றீயா திவறும்’ (குறள் 1002) என்ற வழி இவறு என்பது லோபம் குறித்தது. ‘பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர் போல்’ என்ற வழிப் பீடு என்றது பெருமை குறித்து நின்றது. ‘நொறிலியற் புரவியதிபர் கோமான்’ என்ற வழி நொறில் என்பது நுடக்கத்தின்கண் வந்தது. ‘நொறிலியற் புரவி கழற்கால் இளையோன்’ என்ற வழி நொறில் என்பது விரைவின்கண் வந்தது. ‘கவரிமான்கணம் கல்லறை தெவிட்ட’ என்ற வழித் தெவிட்ட என்பது அடைய என்பது குறித்து நின்றது. ‘களிறு வழங்கதர் கானத் தல்கி’ (பொருந. 46) என்ற வழி அல்குதல் தங்குதற்கண் வந்தது. ‘நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்’ (அகம் 4) என்ற வழி அமல்தல் நெருங்குதற்கண் வந்தது. ‘மலைய நாறிய வியன் ஞாலத்து’ (மதுரைக் 4) என்ற வழி, நாற்றம் என்பது தோற்றம் குறித்து நின்றது. ‘நாற்ற நாட்டத் தறுகாற் பறவை’ (புறம் 70) என்ற வழி நாடுதல் ஆராய்தற்கண் வந்தது. ‘தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ’(கலி. 25) என்ற வழித் தணத்தல் நீக்கம் குறித்து நின்றது. ‘குரலோர்த் தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலை திரிவுறீகிய’ (மலைபடு. 23, 24) என்ற வழி அரலை குற்றம் குறித்தது. ‘மாக்கடல் நிலந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை’ (புறம் 4) என்ற வழி நிவப்பு என்பது ஓக்கம் குறித்தது. ‘மாகந்தி வளடி வருநீள் கொடி மாடவீதி’ என்ற வழி திவள்தல் என்பது தீண்டுதல் குறித்தது. இவர்தல் என்பது பரத்தல் குறித்தது. ‘வாயாச் செத்தோய் என வாங்கே யெடுத்தனன்’ என்ற வழிச் செத்து என்பது குறிப்புணர்த்திற்று. பிறவும் அன்ன. உரியியல் முற்றும். |